அலுவலம் மீது யாழ் பல்கலைக்கழக மாணவர்களே தாக்கியிருக்க வேண்டும். உதயன்.
இன்று காலை 3 மணியளவில் மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாதவர்களால் ஸ்ரீரேலோவின் யாழ்.அலுவகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவ்வியக்கத்தின் தலைவர் உதயன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இத்தாக்குதல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களாலேயே நடாத்தப்பட்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும் தனது கட்சி அலுவலகம் இலங்கை புலனாய்வுத்துறைக்கு தகவல்களை திரட்டுவதற்காகவே யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளதாக அண்மையில் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தாகவும் அச்செய்தியின் பின்னணியில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
0 comments
Write Down Your Responses