சிறிலங்கா இராணுவ வீராங்கணைகள் விபச்சாரிகள்! சிறிதரனுக்கு விளக்குமாறு பதில் சொல்லுமா?
அண்மையில் இலங்கை இராணுவத்தில் 109 தமிழ் பெண்கள் இணைந்து கொண்டனர். இவ்விணைவு நிகழ்வு வன்னியிலே மிகவும் ஆரவாரமாக இடம்பெற்றது. பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்ததுடன் அவர்களின் ஆதரவிற்காக கௌரவிக்கப்பட்டும் இருந்தனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விடயத்தை தமது அரசியல் பிரச்சராத்திற்காக கையில் எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பிபிசி வானொலிக்கு வன்னி மாவட்ட பா.உ சிறிதரன் தெரிவிக்கையில் தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இதை சிறிதரனது சொந்தக்கருத்தாக தெரிவிக்கவில்லை. தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றார்கள் என்றே தெரிவித்துள்ளார்.
உணர்சி வசனங்களை பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவரும் சிறிதரன் இவ்விடயத்திலும் தமிழ் மக்களை திறம்பட பகடைக்காய்களாக்கி பலிக்கடாக்களாக்கியுள்ளார். அதாவது இலங்கை இராணுவத்தில் பெண்கள் யாவரும் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இணைந்து கொண்டவர்கள் எனத் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள் என்பதே சிறிதரன் கூறியிருக்கும் கூற்றின்; பொருள்.
இவ்வாறு சிறிதரன் கூறியதற்கு எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இல்லை. அதாவது இலங்கை இராணுவத்திலே ஆயிரக்கணக்கான இராணுவ வீராங்கணைகள் இருக்கின்றர்கள். அவர்களில் சிங்கள, மற்றும் மலையகத் தமிழ் பெண்கள் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள் என தெரிவிப்பதன் ஊடாக தமிழ் மக்கள் மீதானதோர் வெறுப்புணர்வை ஏற்படுத்தி, இராணுவ வீராங்கணைகளை தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பி, எரிந்த வீட்டில் பிடிங்கினது மிச்சம் எனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அர்ப்ப அரசியல் லாபம் தேடும் வழமையான செயற்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என்பதே சிறிதரனின் நோக்கமாக இருக்கலாம்.
ஆனால் இவ்விடயத்தினை இலங்கை இராணுவத்திலுள்ள இராணுவ வீராங்கணைகள் எவ்வாறு அணுகப்போகின்றார்கள், தாம் இராணுவத்தின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இணைந்து கொண்டவர்கள் அல்லர் என்பனை எவ்வாறு நிரூபிக்கப்போகின்றார்கள் என்பற்கும் பேச்சு சுதந்திரம் எனும் பெயரால் ஒட்டு மொத்த இலங்கை இராணுவத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ள சிறிதரனின் இக்கூற்றானது தமிழ் மக்களின் கூற்று அல்ல என்பதனை ஏற்றுக்கொண்டு சிறிதரனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதற்கும் அப்பால் இன்று இலங்கையின் வரலாற்றில் பலமைல் கற்களை தாண்டிச்சென்று சாதனை படைத்திருக்கின்ற இலங்கை இராணுவத்தின் நாளைய தமிழ் இராணுவ வீராங்கணைகள் சிறிதரன் மீது மேற்கொள்ளப்போகின்ற நடவடிக்கை என்ன என்பதுதான் நான் எழுப்புகின்ற கேள்வி.
இலங்கையின் பாதுப்பு படைகளின் வரலாற்றில் தமிழர் அளப்பெரிய சாதனைகளைப் படைத்திருக்கின்றார்கள் என்பதும் அவை தமிழ் அரசியல் தலைமைகளால் திட்டமிட்டு கொச்சைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டதும் தமிழர் தொடர்ந்தும் பாதுகாப்பு படைகளில் இணையாது செய்யப்பட்டதும் மறக்கவும் மறைக்கவும் முடியாத வரலாற்றுக்கறைகள்.
இந்நிலையில் இன்று வன்னியிலிருந்து இராணுவத்திற்கு இணைந்திருக்கின்ற யுவதிகள் தமிழரின் காவல் தெய்வங்கள் எனப்போற்றத்தகுந்தவர்கள். தமிழ் கலாச்சாரம் எனும் பெயரால் பெண்கள் அடுப்பங்கரையிலேயே முடங்கிக்கிடக்கவேண்டும் என்ற தமிழரின் பெண் அடிமை விலங்கினை உடைத்து இலங்கை இராணுவ சீருடைகளை அணிந்து தமது தேசத்தின் இராணுவக்கடமைகளை நிறைவேற்ற மேற்படி யுவதிகள் தங்களை அர்பணித்து எதிர்வரும் சமுதாயத்திற்கு முன்னோடிகளாக திகழ்ந்துள்ளார்கள். எதிர்வரும் காலங்களில் இலங்கை இராணுவத்தில் இணையவுள்ள பல்லாயிரக்கணக்காக தமிழ் யுவதிகளுக்கான வழிகாட்டிகள் என்ற பெருமையும் இவர்கள் தட்டிக்கொண்டுள்ளார்கள்.
தமது தேசத்தின் தேவை கருதி இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ள யுவதிகள் இலங்கை இராணுவத்தின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய இணைந்துள்ளார்கள் என தெரிவித்து இவர்களை சமூதாயத்திலிருந்து தள்ளி வைக்க சிறிதரன் முனைந்திருப்பதன் நோக்கம் என்ன? தமிழ் இளைஞர் யுவதிகள் அரச நிர்வாக சேவையில் இணைந்திருப்பதுபோல் பாதுகாப்பு படைகளிலும் இணைந்து கொண்டால் இச்சமூதாயம் மேலும் வலுவானதோர் சமூதாயமாக தோற்றம்பெறும் என்ற நிதர்சனம் சிறிதரன் போன்றோரின் சுகபோக வாழ்விற்கு சாவு மணி அடிப்பதாக அமைந்து விடும் என்ற பயமாகும்.
தமிழ் சமூகத்திடம் உண்மைக்கு புறம்பான உணர்சி வசனங்களை மேடைகளில் முழங்கி தமது இருப்பை தக்கவைத்துள்ள சிறிதரன் போன்றோர் தமிழ் சமூகத்திலும் சீருடை அணிந்த சமூதாயம் ஒன்று உருவாவதை கண்டு மிரளுகின்றார்கள். தமிழ் சமூகம் என்றும் தமது பொய்ப்பரப்புரைகளை நம்பும் நலிந்த இனமாகவே இருக்க வேண்டும் எனவும் தம்மிடம் நிமிர்ந்து நின்று கேள்வி கேட்கும் சமூதாயமாக மாற்றம் பெறக்கூடாது எனவும் விரும்புகின்றார்கள். அதன் பொருட்டே இந்த யுகத்திற்கு முடிவு கட்டி முன்னோடிகளாக திகழும் யுவதிகளுக்கு விபச்சாரிகள் என்ற சாயம் பூசியுள்ளார் சிறிதரன்.
எனவே தொடர்ந்தும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமிழ் மக்களை இருண்ட யுகத்தினுள் வைத்திருக்க முயன்று கொண்டிருக்கின்ற சிறிதரன் போன்றோரின் நயவஞ்சக செயல்களிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மேற்படி 109 பெண்களினதும் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தங்களை விபச்சாரிகள் என உலகிற்கு சொன்ன சிறிதரனுக்கு எதிராக இவர்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? தமக்கு ஏற்பட்ட மானநஷ்டத்திற்காக நீதித்துறையிடம் செல்லப்போகின்றார்களா? அன்றில் நேரடியாக தமது பயிற்சி முகாமிலிருந்து ஓரிரு நாட்கள் விடுமுறை பெற்றுக்கொண்டு சென்று சிறிதரனை நேரடியாக பிடித்து விளக்குமாறால் உருட்டி உருட்டி அடிக்கப்போகின்றார்களா?
பீமன்
0 comments
Write Down Your Responses