சேலம் தர்மபுரி மாவட்டங்களில் இன்று காலை நில அதிர்வு
இன்று அதிகாலை 4 மணி அளவில் சேலம் தருமபுரி மாவட்டங்களில் சுமார் 5 நிமிடம் நில அதிர்வு எற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் சேலம் தருமபுரி மாவட்டங்களில் சுமார் 5 முறை இப்படி நில அதிர்வு உண்டாகி இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் என்ன என்று பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான சாமுவேல் அவர்களிடம் கேட்ட போது 'சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயருவதும் குறைவதுமாக இருப்பதால் பூமிக்குள் உண்டாகும் அழுத்தம் காரணமாக கண்ட இயக்கம் மாறுபடுவத்தின் காரணமாக இப்படி அடிக்கடி நில அதிர்வு ஏற்படலாம்.
அடுத்து நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படும் மாவட்டம் சேலம் தருமபுரி மாவட்டங்கள்.
இதன் காரணமாகவும் இந்த நில அதிர்வு இருக்கலாம். மூன்றாவதாக அதிக அழுத்தம் கொண்ட வெடி வைத்துத் தகர்க்கப்படும் கல்குவாரிகளால் இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.
சேலம் தருமபுரி மாவட்டங்கள் எப்போதுமே பாறைப் பகுதிகள் அதிகமுள்ள பிரதேசம். எனவே கல்குவாரிகள் காரணமாகவும் இருக்கலாம்' என்று கூறினார்.
இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு கடும் சத்தத்துடன் கூடிய நில அதிர்வாக இருந்தது என்று சேலம் தருமபுரி மாவட்ட மக்கள் அச்சதுடன் தெரிவித்தனர்
0 comments
Write Down Your Responses