பாராளுமன்ற குழுவின் விசாரணை தடுக்க வழக்கு இன்று விசாரணை
ஒழுக்கமின்மை, திறமையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றப்பிரேணையை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விசாரணையை தடுக்குமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவை தடுக்குமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே இந்த மனுவை விசாரிப்பதற்காக எஸ்.சிறிஸ்கந்தராசா, பி.டபிள்யூ.டி.சி ஜயதிலக மற்றும் அனில் குணவர்த்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமை மேன்முறையீட்டு நீதிமன்றம் நியமித்தது.
இந்த மனுவில் பிரதம நிதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அங்கத்தவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருக்கின்றது.
0 comments
Write Down Your Responses