இலங்கையில் முதலீடு செய்ய செக்குடியரசு முன்வந்துள்ளது.
இலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு செக் குடியரசு முன்வந்துள்ளது என செக் குடியரசின் பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு குழுவின் தலைவருமான டேவிட் வொட் ரஸ்கா அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த போது இத்தகவல்களை வெளியிட்டார்.
இச்சந்திப்பு பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது.
மின் உற்பத்தி, நீர்ப்பாசன திட்டம் உட்பட இலங்கையின் பாரியளவிலான திட்டங்களில் முதலீடு செய்ய செக் குடியரசு விருப்புடன் இருப்பதாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அத்துடன் செக் குடியரசிலிருந்து கூடுதலான உல்லாச பயணிகளை இலங்கைக்கு அனுப்பிவைப்பதாகவும் ஆராயப்பட்டது.
முதலீடுகள் சுற்றுலா உட்பட ஏற்றுமதி துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
செக் குடியரசின் பாராளுமன்ற உறுப்பினர் கெத்தலினா கொனேனா இந்திய மற்றும் இலங்கைக்கான செக் குடியரசு தூதுவர் மிலோஸ்வி ஸ்டெசக் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments
Write Down Your Responses