எல்எல்ஆர்சி நடைமுறப்படுத்தப்படும்.. அமெரிக்காவிற்கு கதை சொல்லியுள்ளார் ஹக்கீம்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி பதில் செயலாளர் கலாநிதி அலிஸா அய்ரிஸ் மற்றும் அமைச்சர் ரவூப் ஹகீமுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று, நீதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் இலங்கையின் அரசியல் ரீதியான பிணக்குகளுக்கு நிரந்தர தீர்வு காணுவதிலுள்ள சிக்கல்கள் வினவப்பட்டபோது கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக நிறைவேற்றுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விடயங்கள் தொடர்பாக, நீதியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது இலங்கையின் நீதிக்கட்டமைப்பு தொடர்பாகவும் கருத்து பரிமாறிக்கொள்ளப்பட்டதாம்.
மேலும் சட்டவிரோத புலம்பெயர்வுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, மக்களுக்கு அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் அமெரிக்காவிற்கு உறுதியளித்ததாக இலங்கை தேசியத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அவ்வாறாயின் இலங்கையிலிருந்து சட்டவிரோமாக வெளியேறுவோரை தடுக்க இலங்கை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
0 comments
Write Down Your Responses