இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி வழங்குவோம். கசகஸ்தான் ஜனாதிபதியிடம் உறுதி.
இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை வெற்றி பெறச் செய்ய முழு அளவிலான ஆதரவை வழங்க போவதாக கசகஸ்தான் ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார.;. கசகஸ்தானுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது கஸக்ஸ்தான் ஜனாதிபதி நூர் சுல்தான் நஸர்பயேவின் இதனை தெரிவித்துள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்ற கஸக்ஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன்கூடிய மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையின் சுற்றுலா மற்றும் வர்த்தக துறையின் அபிவிருததிக்கு கஸக்ஸ்தானினால் வழங்க கூடிய ஆதரவு தொடர்பாக அரச தலைவர்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. அல்மாதாவுக்கும் கொழும்பிற்கும் இடையிலான விமான சேவைகளை விரிவுப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் கஸக்ஸ்தான் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக கஸக்ஸ்தான் மக்களை இலங்கையில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி நூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளாராம்.
இலங்கையின் வர்த்தக கைத்தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு கஸக்ஸ்தான் முதலீட்டாளர்களை ஈடுபடுத்த முடியுமென கஸக்ஸ்தான் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளாhர். மேலும் இலங்கையுள்ள மாணிக்க கற்களை கஸக்ஸ்தானில் பிரபல்யப்படுத்துவதற்கு வர்த்தக கண்காட்சிகளை நடத்த, திட்டமிடுவதாக ஜனாதிபதி நூர் சுல்தான் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses