இரட்டை வாய்க்காலில் தீடிரென்று வந்து குவிந்த மீன்கள்- படம் இணைப்பு
மழை காரணமாக வீதிக்கு குறுக்கே ஊடறுத்து பாய்ந்த வெள்ளத்தோடு அடிபட்டு வந்த ஆயிரக்கணக்கான மீன்களை பொது மக்கள் அள்ளிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடைமழையின் போது இரட்டை வாய்க்கால் பகுதியிலுள்ள மதகு ஒன்றின் ஊடாக தீடிரென்று பெருமளவான மீன்கள் வீதியின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தோடு அடிபட்டு வந்தன.
கேழுறு வகையைச் சேர்ந்த மீன்களே இவ்வாறு தீடிரென்று வெள்ளத்தினை எதிர்த்து வீதியினைக் கடக்க முயற்சி செய்தன. சிறிய பெரிய மீன்கள் என ஆயிரக்கணக்கில் எண்ணிக்கையற்று வந்த மீன்களை கண்ட பொது மக்கள் அவற்றை உரைப் பைகளை வைத்தது பிடித்து அள்ளிச் அள்ளிக் கொண்டு சென்றனர்.
0 comments
Write Down Your Responses