போர் நிறுத்தத்தின் பின்பும் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல்
பாலஸ்தீனம் காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையே 8 நாட்களாக கடும் சண்டை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும் காசாப் பகுதியிலிருந்து ரொக்கேட் தாக்குதலை போராளிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான சண்டையில் பாலஸ்தீன பகுதியில் 150க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 5 பேரும் உயிரிழந்தனர்.
எகிப்து ஜனாதிபதி முகமது முர்சி மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இருதரப்பினரும் சண்டையை உடனே நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தக்கூடாது என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த உடன்பாடு வெளியான பின்பும் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நோக்கி ராக்கெட் குண்டு தாக்குதலை நடத்தினார்கள்.
இவை திறந்த வெளியில் போய் விழுந்ததாலும், சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் செயல் இழக்க வைத்ததாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், காசா பகுதியில் இருந்து 12 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. எங்கள் எதிர்தாக்குதலை கடந்து ஒரு ராக்கெட் எங்கள் பகுதிக்குள் விழுந்து வெடித்தது.
இதில் சேதம் எதுவும் இல்லை என்றும் நாங்கள் போர் விமான தாக்குதலை நிறுத்தி விட்டோம் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தீவிர சோதனை நடத்தி பாலஸ்தீன தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் 55 பேரை கைது செய்தனர். மேலும் இதை கேள்விப்பட்டதும் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் சாலையில் திரண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
0 comments
Write Down Your Responses