மரண விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத வைத்தியருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு
மரண விசாரணையென்று தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு போதரிய ஒத்துழைப்பு வழக்காமை காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரிக்கு எதிராக யாழ்.நீதிமன்றில் அறிக்கையென்று தாக்கல் செய்யப்படவுள்ளது
யாழ்.திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி இவ்வறிக்கையை இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளார்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 30 திகதி சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமானார்
.
இம்மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறிக்கு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஒத்துழைப்பு வழங்கவில்லையென தீடிர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். ;.
எனவே தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு எதிராக இன்றைய தினம் யாழ்.நீதிமன்றில் அறிக்கையென்று தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments
Write Down Your Responses