டெசோ நிறைவேற்றிய தீர்மானங்கள் ஜ.நா வில் கையளிப்பு !
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலு எம்.பி.யும் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவையும், 'டெசோ' மாநாட்டு தீர்மானங்களையும் வழங்கினார்கள். என தி.முக தலைமைக் கழகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவினையும், சென்னையில் நடைபெற்ற 'டெசோ' மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் ஐ.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் வழங்கினர்.
மேலும் மு.க.ஸ்டாலின், பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கு ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் வாழ்த்து கூறினார்.
இந்த சந்திப்பின்போது ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆலோசகர் விஜய நம்பியார் உடன் இருந்தார். இந்தச் சந்திப்பு பகல் 11.15 மணி முதல் 11.43 மணி வரை சுமார் 28 நிமிடம் நடைபெற்றது.
0 comments
Write Down Your Responses