பரீட்சைத்திணைக்களத்திற்கு தொல்லைதரும் அவசர அழைப்பு
தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர அழைப்புக்கு தற்போது தொல்லை தரும் அழைப்புக்களாக மாற்றமடைந்துள்ளது.
தீய நோக்கம் கொண்ட சிலர், பரீட்சை தொடர்பாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ளுவதாகவும் எனவே இவ்வறு பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்புலனாய்வுப் பிரிவை கல்வி அமைச்சு கேட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, உயர்தரப் பரீட்சை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses