இலங்கையை தாக்க தயாராகும் சூரியன்!
வட அரைக்கோளத்திலிருந்து தென் அரைக்கோளத்திற்கு நாளை மறுநாள் 27ம் திகதி முதல் செப்டெம்பர் 8 ம் திகதிவரை சூரியன் பயணிக்கவுள்ள இக்காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் அதிக உஷ்ணமாக இருக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27 தொடக்கம் 31 வரை வடகிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முகமாலை, குமுழமுனை, கொக்காவில், முல்லைத்தீவு, மன்னார், புளியங்குளம், புல்மோட்டை, மறிச்சுக்கட்டி, தந்திரிமலை, ஹொரவப் பொத்தனை, திருகோணமலை பகுதிகளில் அதிக உஷ்ணமாயிருக்கும்.
அதேபோல் செப்டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் எட்டாம் திகதி வரை தென், மேல், கிழக்கு மாகாணங்களில் கலாஓயா, தலாவ, அளுத்ஓயா, காரைதீவு, கதிரவெளி, மங்களவெளி, தம்புள்ளை, திம்முலாகல, மாதம்பை, குருநாகல், மாத்தளை, சீதுவ, உலப்பனை, வலப்பனை, திருக்கோவில், தங்காலை, காலி, யால, கதிர்காமம் ஆகிய பகுதிகளிலும் அதிக உஷ்ணமாக காணப்படும் என வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments
Write Down Your Responses