இலங்கையில் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.. ஏர்டெல் நிறுவனத்தை கொள்வனவு செய்கிறது எடிசலாட் !
ஏனைய தொலைதொடர்பு சேவைகளின் Sim அட்டைகளை கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகள் செங்கல்லுக்கு ஒப்பானது என தொனியில் விளம்பரப்படுத்தி வந்த ஏர்டெல் நிறுவனம் இலங்கையில் தனது சேவையை இடை நிறுத்துவதுடன் தம் இலங்கை நிறுவனத்தை எடிசலாட் தொலைத்தொடர்பு கம்பனிக்கு விற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக / இலாபகரமாக இயங்கி வந்ததை போல் இலங்கையில் முடியாமல் போனதே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் சில வருடங்களுக்கு முன்னர், Tigo நிறுவனம் இலங்கையில் தமது சேவைகளை நிறுத்த தயாரான போது அதனை எடிசலாட்நிறுவனம் கொள்வனவு செய்து வெற்றிகரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போது ஏர்டெல் சேவையில் 1.7 மில்லியன் இலங்கை வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். அதேவேளை எடிசலாட் வாடிக்கையாளர்களும் இணைந்து 6.2 மில்லியன் பேர்களை கொண்ட இலங்கையின் பெரிய தொலைத் தொடர்பு இணைப்பாக மாற எடிசலாட் முயற்சித்து வருகின்றது.
0 comments
Write Down Your Responses