ஒரு கை இழந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தலைவர் சம்பந்தன் அவர்களின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கு எதிராகக் குமைந்து கொண்டிருந்த உணர்வுகள் ஆங்காங்கே மெல்ல வெடித்துவிட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
முதலமைச்சர் வேட்பாளரை வலுக்கட்டாயமாகத் திணித்ததும், அதற்கு அவருக்குத் துணைபோன சுரேஷ் போன்றவர்களுக்கு வேட்பாளர் தெரிவில் சலுகை காட்டப்பட்டதும், தமிழரசுக் கட்சியில் சீற் தருவதாகச் சொல்லி வைத்திருந்த பலரை கடைசி நேரத்தில் வெட்டி விட்ட அலட்சியமும் அவர் மீதான குமுறல்களுக்குக் காரணமாகி விட்டிருக்கிறது.
விருப்பு வாக்குகள் மூலம் சம்பந்தருக்குப் பாடம் புகட்ட தீர்மானித்திருப்பதாக உள்ளிருந்து தகவல் கசிகிறது. சம்பந்தன் நினைப் பதுபோல வெளியிலிருந்து திணிக்கப்பட்டவருக்கு இங்கே வாக்குகள் விழாது என்று ஏனையோர் காட்ட முற்படுவதாகக் கேள்வி.
அதேபோல, வேட்பாளர் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சிக்கு அடுத்த இடம் தங்களுடையதுதான் என்பதை நிறுவிவிட்டிருக்கும் சுரேஷ் அணியினர், கூடிய விருப்பு வாக்குகளை எடுப்பதன் மூலம் தம்பியை மாகாண அமைச்சராக்குவதில் யாரும் தடைக்கு நிற்க முடியா நிலையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
சித்தர், சங்கரி, சீ.வீ.கே, சிவாஜிலிங்கம் போன்ற பழுத்த தலைகளை எல்லாம் எதிர்த்தே சுரேஷ் தனது வாரிசை அரியணை ஏற்ற வேண்டியுள்ளது. இந்தக் களேபரத்தில், இவர் வென்றால் அரசுக்கு விலைபோய்விடுவார் என்ற குற்றச்சாட்டை அவர்களி டையே ஒருவர் மாறி ஒருவர் மீது பிரச்சாரங்களில் சொல்லிவருவதைக் கேட்க முடிகிறது.
இதற்கு முந்திய தேர்தல்களில் கூட்டமைப்புக்காக முழுமூச்சாக மக்களுக்கு உணர்ச்சியேற்றலைச் செய்துவந்த யாழ்ப்பாணப் பத்திரிகை இம்முறை தேர்தலுக்கு முன்பே அரசால் வாங்கப்பட்டு விட்ட தாகவும் எனவே கூட்டமைப்பு வேட்பாளர்கள் அப்பத்திரிகையையும் அப்பத்திரிகை கூட்டமைப்பு வேட்பாளர்களையும் புறக்கணித்துச் செயற்படுவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.
அதேசமயம், அந்தப் பத்திரிகையின் எழுத்துக்கள் மிக நுண்மையான விதத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிராகவே இயங் குவதையும் அவதானிக்க முடிகிறது. அதன் இணையத் தளத்தில் அரச தரப்பு வேட்பாளர் ஒருவரே மக்களால் அதிகம் கவனிக்கப்படு வதாக ஒரு கணிப்பும் வெளியிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
கூட்டிக்கழித்துப் பார்த்தால், இம்முறை உணர்ச்சியேற்றி அலை களை உருவாக்கும் ஊதுகுழல்களில் ஒன்று அதன் சத்தத்தையாரிடமோ இழந்துவிட்டதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, உணர்ச்சியலைகளை உருவாக்கி வெல்லும் தந்திரத்தில் அது ஒரு இழப்புத்தான்.
கூட்டமைப்பின் தலைவர்களும் மற்றெல்லா நாட்களிலும் ஒருவர் சிண்டைப் பிடித்து மற்றவர் உலுக்கிக் கொண்டிருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால், ஒற்றுமையைக் காட்டுவோம் உலகைப் பார்க்கவைப்போம் என்று அந்த ஓரிரு மாதங்களுக்கு தத்தம் வாட் களை முதுகுக்குப் பின்னால் ஒளித்து வைத்துக் கொள்வார்கள்.
இம்முறை தேர்தல் காலத்திலேயே அதிருப்தி காண்பித்தலும், ஒருவரை ஒருவர் வெட்டி ஓடுதலும், மற்றவர் காலைத் தடக்கி விழுத்தி முந்துதலும் கூட்டமைப்பினரால் மறைத்துவிட முடியாத தாகியிருக்கிறது.
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் என்றால், எல்லோரும் இந் நாட்டு மன்னர் என்பதுபோல எல்லோரும் எம்.பி.க்கள் என்றே ஆவ தால் பிரச்சினையில்லை. ஆனால் மாகாண சபையிலோ ஒரு முத லமைச்சரும் நான்கு அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.
அன்பால் இணைந்திருக்கும் கூட்டமைப்பில் இந்தத் தேர்தலில் எதிராளிகளைக் கவனிக்க முடியாதவாறு தங்களுக்குள்ளேயே அடி தடிப் பட்டுக்கொள்ள நேர்ந்திருப்பது இதனால்தான்
0 comments
Write Down Your Responses