1985ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை (14.07.2013 உதயன் செய்தி) ஐ.நா தலையிடும் என்று சொல்லி ஏமாற்றி வரும் தமிழ் தலைவர்களின் சுயரூபத்தினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை பல தடவைகள் மக்களிடம் ஆணை பெற்றார்கள். ஆனால் ஒரு தடவையாவது ஐ.நா சபையில் உரையாற்றி இருக்கிறார்களா? இல்லை ஏனென்றால் அதற்கான கட்டமைப்பினை இதுவரை தமிழ்த் தலைவர்கள் உருவாக்கவில்லை. குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற கட்சியைக்கூட பதிவு செய்யவில்லை.
தமிழ்; மக்களிடம் வாக்கு கேட்டுவரும் கட்சித்தலைவர்களில் பெரும்பாலானவர்களும், வேட்பாளர்களில் பலரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என்பதை உலகம் நன்கு அறியும். எனவே இவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாது. ஏனென்றால் மனித உரிமை குற்றச்சihட்டை முன்வைக்கக்கூடிய அளவிற்கு இவர்களில் எவருமே தூய்மையானவர்கள் அல்ல. சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF), சித்தார்த்தன் (PLOTE ) , அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் (TELO) ஆகியோர் தமிழ் மக்களுக்கு எதிராக செய்த மனித உரிமை மீறல்கள் ஏராளம், பல குற்றச்சாட்டுக்களை மக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கத்தயாராக உள்ளனர்.
திருவாளர் ஆனந்தசங்கரியும், திருவாளர் சம்மந்தனும் தமிழர் போராட்டத்திற்கு எதிராகச் செய்த பிரச்சாரங்களுக்கு நன்றிக்கடனாக அப்போதைய அரசாங்கத்திடம் குண்டு துளைக்காத வாகனங்களை பரிசாக பெற்றவர்கள் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியாகியவுடன் மிகவும் சந்தோசப்பட்டு சிரித்த ஆனந்தசங்கரி 'தம்பியாக்கள் அந்த ராஸ்கலின் பிரேதத்தை யாரிடமாவது வாங்கி எடுத்து வந்து ஜீப்பில் கட்டி தரதரவென்று இழுத்துத்திரிய வேண்டும் என்று ஆசையாக உள்ளது' என்று கூறியவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தலையால் கூட தொடமாட்டேன் என்று 2009ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டார். மற்றவர் சம்மந்தன் வடக்கு, கிழக்கு எமக்கு சொந்தமானது அல்ல என்று அறிக்கை விட்டவர் (வீடியோ ஆதாரத்திற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்)
அடுத்தவர் சரவணபவான் சப்றா என்ற நிதி நிறுவனத்தினை தொடங்கி அன்றாட கூலிவேலை, விவசாய, சேமிப்புக்களில் இருந்த மக்களின் பணத்தை மொத்தமாக சுருட்டி ஏப்பம் விட்டவர் என்று இதுவரை வந்த குற்றச்சாட்டிற்கும் பதில் தராதவர்.
மாவை சேனாதிராஜாவுக்கு வேலையே தனக்கு மக்கள் செல்வாக்கு மூலம் கிடைக்கும் சகல சலுகைகளையும் விற்று பணமாக்குவது தான்.
கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திகொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் ஸ்ரீதரன் இரண்டு கோமாளிகளை அரசியலில் இறக்கிவிட்டுள்ளார். முன்னாள் கல்விப்பணிப்பாளர்களான குருகுலராஜா, அரியரத்தினம் இவர்கள் இருவரும் தான் பாடசாலை மாணவர்களுக்கு கட்டாய ஆயுதப்பயிற்சி என்ற திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு காரணகர்த்தாக்கள். புலிகளை தவறாக வழிநடத்திய உத்தமர்கள் செஞ்சோலை சிறுவர்களின் கொலைக்கு காரணமான துரோகிகள். இவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
2012 இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காவிடில் உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுவேன் என்று வாய்ச்சவடால் விட்ட அடைக்கலநாதனை தமிழ் மக்கள் இனியும் நம்பமாட்டார்கள். வன்னியிலுள்ள 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும் புலிகள் என்று பிரகடனப்படுத்தி மக்களின் படுகொலைக்கு காரணமானவர்தான் சம்மந்தன்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல்!! தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டிய நேரம்!!
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses