கோப்பி குடிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
கலிபோர்னியாவை சேர்ந்த ஆய்வாளர்கள், 40 ஆயிரம் பேரிடம் கோப்பி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுமார் 17 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் தினமும் அதிகளவு கோப்பி குடித்தால் ஆபத்து என அமெரிக்க ஆய்வாளர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வின் முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகம் பேர் கோப்பி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் அதிகளவு கோப்பி குடிப்பதால் உடல் சார்ந்த அளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
குறிப்பாக அவர்களின் இதயம் எளிதில் பலவீனம் அடைந்து விடுகிறது இந்த ஆய்வில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டோர் கோப்பி குடிக்கும் பழக்கத்தால் உயிரிழந்து உள்ளதுடன் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 55 வயதிற்கு உட்பட்டவர்கனாகவே காணப்படுகிறனர்.
ஒரு வாரத்திற்கு 28 கோப்பை கோப்பி குடிப்பவர்களின் இதயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதுடன் கோப்பி குடிக்கும் பழக்கம் உடையவர்களில் 32 சதவீதம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு கோப்பி குடிப்பதை தவிர்ப்பது நலம் என்று அமெரிக்க கலிபோனியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses