ஐயோ, பிரபாகரனுக்கு மலர் அஞ்சலி செய்ய முடியாமற் போய்விட்டதே! - கவலைப்படுகிறாரோ பிள்ளை?
இலங்கைக்கு பயணித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை இராணுவத்தினரினதும் விடுதலைப் புலிகளினதும் இறுதிக் கட்ட போர் முடிவுக்கு வந்த முள்ளிவாய்க்காலில் மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தி மலர் அஞ்சலி செலுத்த முற்பட்ட போதும் அரசாங்கத்தின் பலத்த எதிர்ப்பினால் அவரது எண்ணம் கைகூடவில்லை என நம்பகத் தன்மைமிகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
நவநீதம்பிள்ளைக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் கொழும்பு ஐக்கிய நாடுகள் காரியாலயமும் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில்கூட மலர் அஞ்சலி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
ஆயினும், முள்ளிவாய்க்காலில் மலரஞ்சலி செலுத்தப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீபோல பரவியத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரிவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும், பிள்ளையிடம் தங்கள் எண்ணத்தை மக்கள் அறிந்து எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. எனவே, தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுமாறு கோரியுள்ளது.
இந்தச் செயற்பாட்டை எக்காரணம் கொண்டும் தாம் ஏற்றுக் கொள்வதில்லை என அரசாங்கத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் அறிவித்த்தைத் தொடர்ந்து பிள்ளை கடைசியில் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் புலிகள் அமைப்பு ஒரு கொடுரமான அமைப்பு என்றும் அதன் உறுப்பினர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மன்னிப்பு கொடுக்காது என்றும் பிள்ளை வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் மேற்படி சிங்கள ஊடகத்தின் செய்தியின் உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியதே.
(கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses