மீண்டும் முன்னேஸ்வர ஆலயத்திற்குள் மேர்வினின் அட்டகாசமா??
சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத் திற்கு இன்று சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா அங்கு பலிபூஜைக்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த சேவல்களை விடுவித்துள்ளதுடன் இதற்கு பின்னர் ஆலயத்திற்கு சேவல்களை கொண்டுவருவதற்கு இடமளிக்கவேண்டா மென்றும், ஆலயத்திற்கு வெளியில் வைத்தே அவற்றை விட்டுவிடுமாறும் ஆலய நிர்வாகத்தினரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்தவருடமும் மேர்வின் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு பலிபூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மிருகங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses