கூட்டமைப்பின் நிலைப்பாட்டை புட்டு புட்டு வைக்கிறார் மாணிக்கசோதி
கூட்டமைப்பு மாகாணசபை வேட்பாளர்கள் இன்றுவரை ஒன்றுபட வில்லை, ஆனால் அவர்கள் மக்களை ஒன்றுபடுமாறு கூறிவருகின்றனர் என்று வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று கூட்டமைப்பில் உள்ள வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் கழுத்து வெட்டும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்குள்ள கூட்டமைப்பு வேட்பாளர்கள் அதன் முதலமைச்சர் வேட்பாளரின் படத்தைப் போட்டுத்தான் போஸ் டர்கள் மற்றும் பிரசுரங்கள் என்பவற்றை அடிக்கின்றனர் ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள நிலைமையைப் பார்த்தால் வேறுவித மாகவுள்ளது என்று தெரிவித்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு வேட்பாளர் வாக்குக் கேட்டு மக்களிடம் சென்று சொல்லியிருக்கின்றார் அரசியல் என்பது சாக்கடை, விக்கினேஸ் வரன் நின்று பிடிக்க மாட்டார் அவர் நிச்சயமாக சிறிது காலத்தில் அரசியலில் இருந்து சென்று விடுவார்.
எனக்கு அதிகப்படியான வாக்கு கிடைக்கப் பண்ணுங்க என்று. ஆகவே அவரது நிலைப்பாடு என்னவென்றால் இப்படியாக வாக்கு தனக்குக்கிடைத்தால் விக்கினேஸ்வரன் ஒதுங்கும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியைத் தனக்குத் தரவேண்டும் என்று மற்றவர்கள் மூலமாக அடிபட்டு எடுக்கலாம் என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கின்றார்.
இப்படி ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமாக பிரசாரம் செய்கின்றார்கள் இதில் மிக முக்கியமாக சொல்லப்போனால் தமிழரசுக் கட்சியினரைத் தெரிவு செய்த ஒரு பெரியார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசித்திரிகின்றார்.
அவர் இப்போது சொல்கிறார் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று. ஆனால் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இதுவரை ஒன்றுபடவில்லை.
எனது அரசியல் அனுபவத்தில் சொல்வது என்னவென்றால் நிச்சயம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் வென்றால் அவர்களை உடைத்து தன்னோடு சேர்த்து ஒரு முதலமைச்சரை தங்களோடு இணைத்து ஆக்குவார்கள் என்றும் தெரிவித்த மாணிக்கசோதி அவ்வளவாக தமது கூட்டமைப்பு வேட்பாளர்களின் கருத்தை வெட்டும் பிரசாரத்தில் கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
0 comments
Write Down Your Responses