இராணுவத்தை வெளியேற்றக்கூடாது. தேர்தல் ஆணையாளரிடம் சிவாஜிலிங்கம்!
யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஆணையாளருடனான முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலபேர் கலந்து கொண்டுள்ளனர். சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் வடபகுதியில் நிலை கொண்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் இராணுவம் தற்போது கழற்றக்கூடாது என்றும் அதற்கு தேர்தல் ஆணையாளர் இடமளிக்ககூடாது என்றும் வேண்டியுள்ளார்.
இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையாளர் கேட்டபோது , தேர்தல் காலத்தில் இராணுவ முகாம்களை அகற்றும்போது தமிழ் மக்களுக்கு அரசின்மீது ஒரு நம்பிக்கை வருவதாகவும் இந்த நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது இதனை நீங்கள் ஊடகங்களுடாக மக்களுக்கு முதலில் தெரிவித்து இராணுவத் தளபதிக்கு தெரியப்படுத்துங்களேன் என தேர்தல் ஆணையாளர் கேட்டபோது அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
அங்கு குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் துவார சேகரன் சிவாஜிலிங்கத்தை பார்த்து பிச்சைக்காரன் புண் அரசியலை விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவேன் அரசியல் காரணங்களுக்காக மக்களை தொடர்ந்து அவல நிலைக்குள் தள்ளும் அரசியலை தொடர முற்பட்டால் முன் வரிசைப் பற்கள் அத்தனையும் உள்ளே போகும் என எச்சரித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses