கிழக்கு மாகாண முத்திரை வரி அறவீடு தொடர்பில் கலந்துரையாடல், இந்திய இலக்கிய குழு கிழக்கு மாகாண இலக்கிய குழுவுடன் சந்திப்பு!
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களிற்கான முத்திரை வரியினை துரிதமாக பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் குறித்த மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் முதலமைச்சர் செயலகத்தில் நேற்று(28.08.2013) புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முத்திரைவரிகளை உள்ளூராட்ச்சி மன்னறங்கள் இலகுவாக பெறும் பொருட்டு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் நோக்கம் குறித்தும் ஆசிய மன்றத்தின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்தினால் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு முத்திரை வரியினை வழங்குவது தொடர்பான கடந்த கால செயற்பாட்டு மீளாய்வும், தற்போதைய வரி அறவீட்டு நிலைமை எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் முத்திரை வரியினை வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
காணிப் பதிவுகளை மேற் கொள்கின்றபோது உண்மைப் பெறுமானத்தை காண்பிக்காது குறைந்த பெறுமானமுடையதாக காண்பிக்கப்பட்டு பதிவுகள் மேற் கொள்ளப்படுவதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வர வேண்டிய அதிகளவான வருமானங்கள் இழக்கப்படுவதாக இங்கு கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் சுட்டிக்காட்டியதுடன் இதனை நிவர்த்தி செய்ய தேவையான வழிவகைகளை மேற் கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எம்.உதயகுமார், மாகாண பிரதிப்பிரதம செயலாளர் நிதி எஸ்.குமரகுரு, மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர்கள், ஆசிய மன்றத்தின் சார்பில் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை மற்றும் மட்டக்களப்பு காணிப் பதிவாளர்கள், கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளின் கணக்காளர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே வேளை இலங்கைக்கு வருகை தந்த இந்தியா திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமையில் இந்திய இலக்கியக் குழவிற்கும் கிழக்கு மாகாண இலக்கியவாதிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் அண்மையில மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் நடபெற்றது.
இந்தச்சந்திப்பில் கதிரவன் சுங்சிகை ஆசிரியர் த.இன்பராஜா, கவிஞர் எம்.சதாசவம் ஆகியோருக்கு இந்திய இலக்கியக்குழுவினரால் பொன்னாடை போர்த்தி,நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments
Write Down Your Responses