TNA தலைவர்கள்மீதும் மண்டையன் குழு மீதும் சர்வதேச விசாரணை வேண்டும்! நவநீதம்பிள்ளையிடம் அருண் தம்பிமுத்து வேண்டுகோள் !

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து அவர்கள் நவநீதம்பிள்ளை அவர்களை திருகோணமலையில் சந்தித்து உரையாடினார். அவ்வுரையாடலின்போது இலங்கை சம்மந்தமான விசாரணையானது யுத்தத்தின் இறுதிப்பகுதியை மட்டும் கவனத்திற்கொள்ளாது கடந்த காலத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டார் .

அவர் மேலும் கூறுகையில் ,"2009 ஆம் ஆண்டு முடிவுற்ற யுத்தத்தின் யுத்தம் பற்றிய விசாரணையை வேண்டி நிற்போர் அதற்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள் ,ஆட்கடத்தல் ,சிறுவர்களை கட்டாயமாக படையில் சேர்த்தல் போன்ற அநியாயங்கள் நடந்துகொண்டிருந்த வேளை அதை முன்னின்று நடத்தியவர்களாகவும் அதற்கு துணை போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களாக இருப்பவர்கள் 89-90 காலப்பகுதியில் தமிழ் தேசிய இராணுவத்திற்கு தலைமை தாங்கி புலிகளுக்கெதிரான யுத்தத்தை முன்னின்று நடாத்தி கல்விமான்கள் , பத்திரிகை ஆசிரியர்கள், பொது மக்கள் என எத்தனையோ உயிர்களை பலி எடுத்திருக்கிறார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்தை வழிநடத்தி எத்தனையோ உயிர் அழிவுக்கு காரணமாக இருந்தவர்கள் இப்போ தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களாக இருக்கின்றார்கள். நான்காவது ஈழப்போர் நடந்துகொண்டிர்ந்த காலகட்டத்தில் புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என கூறி அவர்களுடன் தேன்நிலவு நடாத்திய சம்மந்தன் ,விசாரணை கோரி நிற்பது நகைப்புக்கிடமானதாகும்.

வன்னி யுத்தத்தின் போது மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட வேளை வாய் மூடி மௌனிகளாக இருந்து அதற்கு துணைபோன தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். என்ன அடிப்படையில் யுத்த குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரித்தார்கள் ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

"மண்டையன் குழு " என்ற துணைக்குழுவிற்கு தலைமை தாங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் 89-90 காலப்பகுதியில் புலி உறுப்பினர்களை வெட்டியும் ,சுட்டும் ,உயிருடன் எரித்தும் கொன்று குவித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News