விருப்பு வாக்குக்காக சக கட்சிக்காரன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் இராமநாதன்.
யாழ் சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று மாலை 19.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆழும் கட்சி ஆதரவாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேற்படி துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக உள்ள அங்கஜனின் தந்தை இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் குமரசர்வானந்தாவின் ஆதரவாளர் எனத் தெரியவருகின்றது.
குமரசர்வானந்தா முன்னாள் எம்பி மகேஸ்வரன் மற்றம் அவரது மனைவி விஜயகலா ஆகியயோருக்கு சாரதியாக கடமை புரிந்தவர். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக சாவக்சேரி நகர சபைக்கு தெரிவாகியிருந்தார். தற்போது ஆழும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள இவருக்கும் அங்கஜனுக்குமிடையே ஏற்பட்டுள்ள விருப்பு வாக்கு போட்டியே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் எனத் தெரியவருகின்றது:
0 comments
Write Down Your Responses