இலங்கையில் ஆறு மாத காலத்தில் மட்டும் 75 பேருக்கு மரண தண்டனை!
இலங்கையின் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் 75 பேருக்கு மல மாவட்ட நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 1080 பேர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணமான பெண்ணுடன் கள்ளத் தொடர்பைப் பேணியமை, காணிப் பிரச்சினை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம், மதுபோதை, போதைப் பொருள் பயன்பாடு போன்ற காரணிகளினால் ஏற்பட்ட முரண்பாடுகளில் கொலைகளை செய்தவர்களும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய காரணிகளுக்காகவும் அதிகளவாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகளவான மரண தண்டனைக் கைதிகள் வெலிக்கடை மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
0 comments
Write Down Your Responses