மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் சடலமாக மீட்பு!
மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் (51 வயது) வீட்டுத் தோட்டத்திலிருந்து சடலமாக இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள் ளைகளின் தந்தையான இவர், ஆண்டிகம பிரதேசத்திலுள்ள தனது வீட்டின் தோட்டத்திலிருந்தே சடலமாக மீட்கப் பட்டுள்ளார். இந்த சடலத்தை கண்ட உறவினர்கள் பொலிஸாரிற்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, குறித்த சடலத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு சோடி பாதணி ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses