அரோகர மந்திர ஒலியுடன் நல்லூர் கந்தன் கொடியேற்றம்!
பெருந்திரளான அடியார்களின் அரோகரா என்ற மந்திர ஒலியுடன் இன்று(12.08.2013) காலை 10.00 மணிக்கு நல்லூர்க்கந்தன் கொடியேற்றம் அதிகாலை 4 மணிக்கு பள்ளி எழுச்சியுடன் ஆரம்பமாகிய இன்றைய பூசைகள், காலை 5 மணிக்கு உச்சக்காலைப் பூசையைத் தொடர்ந்து நல்லூர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.
நல்லை கந்தன் ஆலய கொடியேற்ற மகோற்சவக்குருக்கள் வைகுந்த நாதசர்மா தலைமையில் நடைபெற்ற வசந்த மண்டப பூசையினைத் தொடர்ந்து சிவப்பு வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு பிள்ளையார் எலி வாகனத்திலும், முருகப்பெருமானின் ஆயுதமான வேல், மயில் வாகனத்திலும், தனி ஒரு மயில் வாகனத்தில் மகாவல்லி ( வள்ளி), கஜவல்லி (தெய்வானை) சமேதரராக தம்பமண்டபத்தில் வந்து நிற்க, மகோற்சவக்குருக்கள் தலைமையில் வேத மந்திர வாந்தியங்கள் முழங்க காலை 10.00 மணிக்கு கொடியேற்றம் நடை பெற்றது.
q9கொடியேற்றத்தைத் தொடர்ந்து சுவாமி உள் வீதி வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்ததுடன் காலைப் பூசைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வெளியே அமைக்கப்பட்டிருந்த நல்லை ஆதீன அன்னதானமடம், துர்க்கா மணிமண்டபம், 63 நாயன்மார் அன்னதான மடம், நடராஜா பரமேஸ்வரி மண்டபம், மூத்த தம்பி அன்னதான மண்டபம் போன்றவற்றில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இம்முறை நல்லூர்க்கந்தன் கொடியேற்றம் பாடசாலை விடுமுறைக்காலத்தில் வந்ததால் யாழ்ப்பாணம் மட்டுமலாது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இது மட்டுமல்லாது பக்தர்களின் நன்மைகருதி அதிகளவான பொலிசாரும் ஆலய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 comments
Write Down Your Responses