வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாதுவிட்டால் மற்றையதை நாங்கள் ஜெனீவாவில் பார்த்துக் கொள்வோம்! முஸ்லிம் காங்கிரஸ்
வட மாகாண சபைக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிடுகிறது.
காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி, உதயன் பத்திரிகையுடனான நேர்காணலில் குறிப்பிடும் போது, அவ் வாறு அதிகாரங்கள் வழங்கப்படாதவிடத்து அரசு சர்வதே சத்திற்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனக் குறிப்பிட்டு ள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியை சுவீகரித்துக் கொண்டிருப்பதால் அவர்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டு சகல உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், அரசாங்கம் அதனை விட்டு மெல்ல விலகிச் செல்வதானது எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஜெனீவா மாநாட்டில் அதற்குப் பதிலளிக்க வேண்டிவருமே என்ற எண்ணத்தினால்தான் எனவும் சுட்டிக் காட்டுகின்றார்.
புலிகள் ஆயுதங்கள் தாங்கி, அந்த பலத்துடன் யுத்தம் செய்தது. தற்போது ஜனநாயக சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள மக்களுக்கு அதிகாரத்தை வழங்காமலிருப்பது பெரும் பிரச்சினைக்குரியது எனவும், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது போல, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses