விக்கிரமபாகுவும் வாசுதேவ நாணயக்காரவும் இருக்கும்வரை உண்மையான சோசலிஸம் இருக்கும்! - பேராசிரியர் அனஸ்

பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகங் களை எப்படி மறப்பது? எவ்வாறு மறைக்க முடியும்? முஸ்லிம்களுக்கு துன்பியலான, பயங்கரம்மிக்க சூழ்நிலையையே பொதுபல சேனா உருவாக்கியது. 21 ஆம் நூற்றாண்டின் 9 ஆம் மாதத்தில் இலங்கையில் இந்தப் பயங்கரவாத நிலை எவ்வாறு ஏற்படலாம்? என்பது எனக்குத் தெரியவில்லை' எனக் குறிப்பிட்டார் பேராசிரியர் அனஸ்.

எம்.சீ. ரஸ்மினின் 'போர்க்கால இலக்கியங்கள்' ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983 - 2007) என்ற ஆய்வு நூலின் நூலின் வெளியீடும் ஆய்வரங்கும் நேற்று (29) கொழும்பு 10 டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள இலங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது பேராதனைப் பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறைப் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் குழுநிலைக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு நூல் ஆய்வுரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

'இலக்கியம் அரசியலைப் பேசுகின்றது. 'பன்மைத்துவம்' என்பது இன்றைய தேவை. தற்போதைய தேவை என்பது அதனது கருப்பொருளாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் போர்க்கால இலக்கியத்தில் பலவற்றை வெளிக்கொணர்ந்துள்ளனர். ஆயினும் சிங்கள படைப்பிலக்கியவாதிகள் போர்க்கால இலக்கியத்தில் சாதித்தவைதான் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. திரு. 'ஞானம்' ஞானசேகரன் அவர்கள் 'போர்க்கால இலக்கியங்கள்' என்ற பாரியதொரு புத்தகத்தை தமிழுலகுக்குத் தந்திருக்கிறார். அதில் பல்வேறு தமிழ்க் கவிஞர்கள், கட்டுரையாளர்கள் ஆக்கங்களைப் படைத்திருக்கிறார்கள்.

இலங்கை ஜனநாயகத்தினின்று பிரிந்து செல்கின்றதோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் துன்பியலை எடுத்துக் காட்டுவதற்கு ஞானம் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஜனநாயக கட்டமைப்பு எமது நாட்டுக்குத் தேவையாக இருக்கின்றது. ஜனநாயகமும் உண்மையான சோசலிஸமுமே நாட்டுக்குத் தேவை.

விக்கிரமபாகுவும் வாசுதேவ நாணயக்காரவும் இருக்கும்வரை இந்த உண்மையான சோசலிஸமும் வாழும். மாவனல்லைக் கலவரம் ஏற்பட்டபோது வாசுதேவ நாணயக்காரவே முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார். அவரது வார்த்தைகள் வைரங்களாக இருந்தன. என்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாசுதேவ நாணயக்கார பேசிவருகின்றார்.

1915 ஆம் ஆண்டு சிங்கள - முஸ்லிம் கலவரம் பற்றி எந்தவொரு முஸ்லிம் எழுத்தாளரும் எந்தவொரு படைப்பையும் படைக்கவில்லை... கவிதை, கட்டுரைகள் எதுவும் இல்லை... குறைந்தளவு ஒரு புகைப்படம் கூடக் கிடையாது. முடியுமானால் ஒரு புகைப்படத்தைச் சமர்ப்பிக்குமாறு நான் சவால் விடுகிறேன். 1976 இல் கலகம்... மீண்டும் 2013 இல் பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன...

இன்று தமிழர்கள் உரிமைக்காகவும், முஸ்லிம்கள் இருத்தலுக்காகவும் எனும் நிலையே காணப்படுகிறது.' எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் ஆங்கிலத்திலும், ருகுணு பல்கலைக்கழக சிங்களத் துறை விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க சிங்களத்திலும் நூல் அறிமுகம் செய்தனர். கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் யோகராசா 'போர்க்கால சிங்கள இலக்கியங்களின் புனைவையும் யதார்த்தத்தையும் பிரித்தறிதல்' எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News