ஆயுதங்களுக்குப் பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள்! - மலாலா
ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த வந்த மலாலா மீது, கடந்தாண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
தலையிலும், கழுத்திலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மலாலா மீண்டு வந்தார்.
தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 68வது ஐநா பொதுக் கூட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி நேற்று நடந்த சமூக நல மாநாட்டில் மலாலா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு துப்பாக்கிகளை அனுப்புவதற்கு பதிலாக புத்தகங்களை அனுப்பி வையுங்கள். இராணுவ டேங்குகள் அனுப்புவதற்கு பதிலாக பேனாக்களை அனுப்புங்கள்.இராணுவ வீரர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை அனுப்புங்கள், எல்லா குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதும் நைஜீரியா, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதும் எனது கனவு எனத் தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses