நான் விமல் வீரவன்சவுக்குப் பயப்படுகிறேன்.... ! - விக்னேஸ்வரன்
தான் அமைச்சர் விமல் வீரவன்சவுக்குப் பயந்து பின் வாங்குவதாக வட மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள சீ.வீ. விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட் டுள்ளதாவது,
'தெற்கின் ஆட்சியாளர்களுடன் கதைப்பதற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் விமல் வீரவன்ச போன்றவர்கள் பல்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். ஜனாதிபதியும் அவரது பேச்சுக்கு தலை சாய்ப்பது தெரிகிறது. எங்களிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு பிறகு வேறொன்றைச் சொல்வார்களோ என்ற பயம் என்னை ஆட்கொள்கிறது. விமல் சொல்வதை ஜனாதிபதி செய்வார் என்று நான் நம்புகிறேன்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ சேர்ந்து செயற்படுவதற்கு எங்களுக்கு அழைப்பு விடுத்தார். என்றாலும் விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். பெரும்பாலும் அவரின் பேச்சை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளும் நிலையே உள்ளது.
சில நேரங்களில் சிங்கள இனவாதிகள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு ஆட்சியாளர்கள் தலைசாய்த்து தாம் முன்னர் கொண்டிருந்த கருத்திற்கு மாற்றம் செய்யும் நிலையும் தோன்றியுள்ளது. 'பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன இதற்குச் சில உதாரணங்களாகும்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses