எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது: கேஹலிய
வடக்கு மாகாண சபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மா காண சபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட் டில் மாற்றம் ஏதும் இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல மீண்டும் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் அந்த சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்லமுடியாது. வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனும் நீதியரசராக இருந்த காலத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார், என்று ரம்புக்வெல சுட்டிக்காட்டி யிருந்தார்.
இதேவேளை இலங்கையின் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்துக்கு உரியவை என்று தீர்ப்பை வெளியிட்டமையானது தெளிவான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses