முதலமைச்சர் நியமனம் தொடர்பாக முடிவு செய்ய ததேகூ-வை அழைக்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர்.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜி.ஏ. சந்திரசிரி, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ள முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சி.வி. விக்கனேஸ்வரனை, அவரது முதலமைச்சர் நியமனம் மற்றும் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக அடுத்த கிழமை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் இராணுவத் அதிகாரியான ஆளுநர் ஒருவர் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளமாட்டார் என்ற செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நியமனம் என்பது ஜனாதிபதியின் நியமனம். விதிமுறைகளின் பிரகாரம் முதலமைச்சர் ஆளுநர் முன் பதவிப்பிரமானம் செய்யவேண்டும். அவ்வாறு மறுப்பதற்கு நீதியில் இடமுண்டா, இல்லை இது வெறும் வாய் வீராப்புத்தான என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments
Write Down Your Responses