தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேசசபை தலைவர் கைது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேசசபை தலைவர் எஸ்.விஜயகாந் காசோலை மோசடிக் குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைகளுக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில், லொறி சாரதி ஒருவருக்கு ரூ.5 லட்சம் என குறிக்கப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வெருகல் பிரதேசசபை தலைவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ரூ.2 லட்சம் பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses