1700 கி.மீட்டர் வேகத்தில் ஏவுகணைகளை சுமந்துகொண்டு பறக்கும் ஆளில்லா போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது ஈரான்!
ஈரான் நாட்டை உளவு பார்ப்பதற்காக அமெரிக்காவால் அனு ப்பப்பட்ட சில ஆளில்லா நவீனரக உளவு விமானங்களை, ஈரான் விமானப்படை சிறை பிடித்து வைத்து வல்லரசு நாடுகளின் மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், போர் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சுமந்தபடி மணிக்கு ஆயிரத்து 700 கி.மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 24 மணி நேரங்களுக்கு பறக்கவல்ல ஆளில்லா அதிநவீன போர் விமானத்தை அந்நாட்டின் விமானப் படை அறிமுகப்படுத்தியது.
'ஷஹித்-129' என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 8 வெடிகுண்டுகள் அல்லது ஏவுகணைகளை சுமந்தபடி வெகுநீண்ட தூரத்தையும், குறுகிய நேரத்தில் சென்றடைந்து, அசையும் மற்றும் அசையா இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல்மிக்கது என ஈரான் விமானப்படை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses