ஈ.பி.டி.பிக்கு அரசியல் நாகரீகம் தெரியுமாம்! சிறீதரனின் குற்றச்சாட்டை கண்டிக்கிறார்களாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளும ன்ற உறுப்பினர் சிறிதரனின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஈபிடிபி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது அவ்வறிக் கையில்.

தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது வன்னியிலும், தீவகப்பகுதியிலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டி ருப்பதாகவும், வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட படுதோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்களைத் தாக்கி வருவதாகவும். இத்தாக்குதல் சம்பவங்களில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஈடுபட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியிருப்பதை நாம் கண்டிக்கின்றோம்.

கிளிநொச்சியிலேயே அதிகமான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், மக்கள் அஞ்சி வாழ்வதாகவும் சிறீதரன் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் எழுந்தமானமாக குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஈ.பி.டி.பியாகிய நாம் எமது மக்களின் விருப்பங்களை எப்போதும் மதித்து நடந்துள்ளோம். ஜனநாயகத்தை மீண்டும் வடக்கில் ஏற்படுத்த துணிந்து செயலாற்றியவர்கள். எமக்கு யாரையும் தாக்கவேண்டிய அவசியமோ, எவரையும் அச்சுறுத்த வேண்டிய அவசியமோ இல்லை.

வடக்கு மாகாணசபை எமது சபை அதைப்பாதுகாக்கவே நாம் விரும்புகின்றோம். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் எமது மக்களின் தீர்மானத்தை புரிந்துகொண்டுள்ளோம். எமக்கு தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. நாம் சிறீதரனின் செயற்பாடுகளையும் தாண்டி கிளிநொச்சியில் ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருப்பது சிறீதரனுக்கு திகைப்பையும், எரிச்சலையும் கொடுத்திருக்கலாம்.

அதேபோல் தீவகப்பகுதி மக்கள் எமது மக்கள். நாம் அவர்களுடனேயே வாழ்ந்து வருபவர்கள் அவர்களிடத்தில் ஜனநாயகத்தைப் போதிப்பவர்களும் நாமே. தேர்தல் முடிவுகளையிட்டு எமது மக்களை வெறுக்கும் அநாகரீகமானவர்கள் நாமல்ல. அங்கு இரவில் மதுபோதையில் நடமாடும் கும்பல் மக்களை மிரட்டுவதாக சிறீதரன் கூறியிருப்பது வேடிக்கையாகும்.

இவ்வாறு குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கும் சிறீதரன் இது தொடர்பில் உரியவகையில் முறைப்பாடுகளைச் செய்யவில்லை அது ஏன் என்று கேட்கின்றோம்.

சிறீதரனின் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விசமத்தனங்கள் எமது மக்களின் கவனத்தை திசை திருப்புகின்ற நோக்கமாகவே கருத இடமுண்டு. எனவே இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை விடுப்பதை விட்டுவிட்டு இனியாவது அர்த்தமுள்ள அவசியமான பணிகளில் கவனஞ்செலுத்தினால் நல்லது. கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு உண்மைக்குப்புறம்பான பல குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருந்தீர்கள். தற்போது ஆளும் தரப்பாக இருக்கும் கூட்டமைப்பினர் பொறுப்பை உணர்ந்து செயற்படுவதே பொருத்தமாக இருக்கும்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மக்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் இவ்வாறான விசமத்தனங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கவேண்டாம். எவர் மீதாவது தாக்குதல் சம்பவங்களோ, அச்சுறுத்தல்களோ இடம் பெற்றால் அது தொடர்பில் பொலிஸாரிடம் துணிச்சலாக முறையிடுவது அவசியமாகும். அவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் குறித்து எமது கவனத்துக்குக் கொண்டுவந்தால் நாம் உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட எமதுபங்களிப்பைச் செய்வோம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News