நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்
மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் ஜனாதிபதிக்கான வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் மக்கள் மீளக்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத நிலையில் கீரிமலை, நகுலேஸ்வரம் பகுதியில், உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பிரதேசத்தில் புதிதாக மூன்று மாடிகளைக் கொண்ட மிகப் பிரமாண்டமான கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதிக்கான வாசஸ்தலமே இவ்வாறு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுவதுடன் கண்டியில் ஜனாதிபதி வாசஸ்தலம் உள்ளதைப் போன்று வடக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதி வாசஸ்தலமாக இது அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments
Write Down Your Responses