யாழில் சிங்களத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை மொழிமாற்றுவதற்கான நடைமுறை!
வட மாகாண சபைத் தேர்தலையொட்டி தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் முகமாக இடம்பெற்ற நடமாடும் சேவையில் விண்ணப்பித்தவர்களில் பலருக்கும் தனிச் சிங்களத்தில் மட்டும் விபரங்கள் எழுதப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இத்தகைய தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெற்ற வர்கள் தமது விபரங்கள் அடங்கிய கோரிக்கை கடிதத்தையும் மற்றும் தேசிய அடையாள அட்டைக்கான மூன்று படங்களையும் கிராம அலுவலர்கள் ஊடாக மீள அனுப்பி குறிப்பிட்டதேசிய அடையாள அட்டைக்கு பதிலாக தமிழ், சிங்கள மொழிகள் அடங்கிய விபரங்களுடன் தேசிய அடையாள அட்டையை மீளப் பெற முடியும் என தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments
Write Down Your Responses