15 வயது மாணவி கர்ப்பம் ஆசிரியரும் மாணவியின் தாயும் கைது!
கந்தப்பளை பிரதேசத்தை சேர்ந்த தோட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரது கர்ப்பத்திற்கு காரணமாகவிருந்தார் என்ற சந்தேகத்தில் கந்தப்பளை பகுதி தோட்ட பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரையும் அதற்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் மாணவியின் தாயாரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவ்விருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவி கடந்த சில மாதங்களாக பாடசாலைக்கு வருகை தரவில்லை என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த ஆசிரியர் கந்தப்பளை பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையறிந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு சென்று குறித்த ஆசிரியரை பாடசாலையை விட்டு வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்தைதை அறிந்த சந்தேகநபரான ஆசிரியர் அரைநாள் விடுமுறையுடன் செல்வதற்கான முயற்சியில் இடுபட்ட போது அங்கு வந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
அது மட்டுமல்லாது மாணவி கர்ப்பமாகுவதற்கு மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments
Write Down Your Responses