மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்...! - வாசு
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமையை மத்திய அரசாங்கம் முழுமையாக தன்வசம் வைத்திரு க்காது, மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கக் கூடியதொரு முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.
அதற்காக தேசிய காணி ஆணைக்குழுவொன்றை நியமிப் பதற்கான பிரேரணையொன்றை தான் அரசாங்கத்திடம் முன்வைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடும் அவர், அந்தப் பிரேரணையை அடுத்த பாராளுமன்றத் தொடரில் தேர்வுக் குழுவினரின் முன்னிலையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமை மத்திய அரசுக்கே சொந்தமானது என நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்வு அதற்குப் பாதகமாக அமையாது எனவும், நீதிமன்றத்திடம் எத்தனை தீர்வுகள் இருந்தபோதும், அதற்கெல்லாம் மேலாக பாராளுமன்றத்திற்கே உயர் அதிகாரம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses