இம்முறை வாக்குகள் புதுமுறையில் கணிக்கப்படும்! - தேர்தல் ஆணையாளர்
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மத்திய, வடக்கு மற்றும் வடமாகாண சபைத் தேர்தலின் வாக்காளிப்பைக் கணிப்பதற்காக புதுமுறையொன்றைக் கையாளவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிடு கிறார்.
இலங்கை வரலாற்றின் முதன்முறையாக அறிமுகப்படுத் தப்படுகின்ற இந்த முறையானது வாக்காளர்களின் பாதுகாப்பையும், வாக்காளிப்பைக் கணிக்கும்போது அதன் இரகசியத்தன்மையை பெரிதும் பாதுகாக்கக்கூடியதாக அமையும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை தேர்தல் முடிவுகளை அறியத்தருவதற்காக அறிமுகப்படுத்தப்படுகின்ற புதுமுறையின் மூலம், எந்தவொரு கிராமத்திலும் நகரத்திலும் அவ்வவ் அரசியல் கட்சிகளுக்கு சுயாதீனக் குழுக்களுக்கு வேட்பாளர்களுக்கு எத்தனை வாக்குகள், விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதென்பதை கண்டுபிடிக்க முடியாமல் போகும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குகளைக் கணிக்கும்போது, தற்போது நடைமுறையில் உள்ள முறையினால் எந்தவொரு வாக்குச் சாவடியிலிருந்தும், கிராமம் மற்றும் நகரத்திலிருந்தும் பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் அவ்வவ் அரசியல் கட்சிகளுக்கும் சுயாதீனக் குழுக்களுக்கும் கிடைக்கப் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அவ்வவ் வேட்பாளர்களுக்கு அவ்வவ் பிரதேசதங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை என்பவற்றை அறிந்துகொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு தெரிந்துகொள்ள முடியும் என்பதனாலேயே அரசியலாளர்கள் அவ்வவ் கிராமங்களிலும் பிரதேசங்களிலும் தமக்கு விருப்பு வாக்குகள் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதாகவும், தேர்தலின் பின்னர் வாக்காளர்களின் மனம் நோகும்படி நடந்துகொள்வதாகவும், அதனால் வாக்காளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வாக்குக் கணிப்பீடும் முறைக்கேற்ப, ஒவ்வொரு தேர்தல் நிலையத்திலிருந்தும் குறித்த அளவு கணிப்பீடு செய்யும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்களிப்புப் பெட்டிகள் எழுமாற்றாகத் தெரிவுசெய்யப்பட்டு கணிப்பீடு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கேற்ப ஒரு பிரதேசத்திற்குட்பட்ட 10 வாக்களிப்புப் பெட்டிகள் காணப்பட்டால் அது மூன்று கணிப்பீட்டு நிலையங்களுக்கேனும் வழங்கப்படும் எனவும், அதன் மூலம் அவ்வவ் அரசியல் கட்சிகளுக்கோ வேட்பாளர்களுக்கோ எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதைக் கணிக்க முடியாமற் போகும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses