அவுஸ்திரேலிய பெண் மீது மோசமான பாலியல் தாக்குதல் புரிந்த இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது!
அவுஸ்திரேலிய பெண் ஒருவர் மீது மோசமான பாலியல் தாக்குதல்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையரொருவர் அவுஸ்திரேலியாவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னி, பிளேக் டவுன் புகையிரத நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கையர் அவுஸ்திரேலிய பெண்ணை இரண்டு தடவைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர். இருவருக்கு இடையில் தேவாலய த்தில் ஏற்பட்ட தொடர்பு தொலைபேசி ஊடாக தொடரப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இவருக்கான பிணை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிளேக் டவுன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses