வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் நாளை!
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெள்ளி க்கிழமை மாலை நடைபெறவுள்ளது. பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 03 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றம் முதலிய கிரியைகளுடன் ஆரம்பமானது.
மகாபாரதக் கதையினை நினைவு கூரும் முகமாக 18 தினங்கள் நடைபெறும் இவ்வாலய உற்சவத்தில் இன்று வியாழக்கிழமை அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்காக தவநிலை செல்லும் காட்சியும், இதில் பண்டிமறித்தல், கமலகன்னி, ஏலகன்னி மறித்தல், அரவாணை களப்பலிகொடுத்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை மாலை ஆலய முன்றலில் பஞ்ச பாண்டவர்கள், திரௌபதை மற்றும் தேவாதிகள் சகிதம் தீ மிதிப்பில் ஈடுபடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. மறுநாள் சனிக்கிழமை தீக்குழிக்கு பால்வார்க்கும் சடங்குடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.
0 comments
Write Down Your Responses