எம்.சீ. ரஸ்மினின் ஆய்வுநூல் வெளியீட்டு விழா இம்மாதம் 29 இல்...
பிரபல எழுத்தாளரும், கவிஞரும் பன்னூலாசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான எம். சீ. ரஸ்மினின் போர்க்கால சிங்கள இலக்கியங்கள் - ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983-2007) எனும் ஆய்வு நூல் வெளியீடும், ஆய்வினை மையமாகக் கொண்ட 'இலக்கியமும் பன்மைத்துவமும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் எதிர்வரும் 29ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு கொழும்பு, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
சிங்களத்திலிருந்து பல நூல்களைத் தமிழுக்கு அளித்துள்ள கலைமாணி எம். சீ. ரஸ்மினின் நூல் வெளியீட்டு விழாவில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேச நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
பிரபல பத்தி எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ். சிவகுமாரன், உருகுணு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க ஆகியோரின் நூல் அறிமுகம் செய்வர்.
பேராதனைப் பல்கலைக் கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் 'இலக்கியமும் மீளிணக்கமும்: முஸ்லிம்களின் இருத்தலுக்கான போராட்டம் பற்றிய பதிவுகள்' எனும் தலைப்பிலும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் 'போர்க்காள சிங்கள இலக்கியம் - ஒரு பன்மைத்துவ ஆய்வு எனும் நூல் வெளிப்படுத்தும் பன்மைத்துவ இலக்கியம் என்கின்ற கருத்தியல்' எனும் தலைப்பிலும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராசா 'போர்க்கால சிங்கள இலக்கியங்களின் புனைவையும் யதார்த்தத்தையும் பிரித்தறிதல்' எனும் தலைப்பிலும் ஆய்வுரைகள் செய்யவுள்ளனர்.
பிரபல ஒலி - ஒளிபரப்பாளர் நாகபூசணி கருப்பையா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses