மடு மாதா உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக இன்று முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
மன்னார் மடு மாதா வருடாந்த ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் நன்மை கருதி விசேட ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. தலை மன்னார் ரயில் பாதையின் முதல் கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனால் மடு ரயில் நிலையம் வரை ரயில்சேவைகள் நடைபெறும்.
கொழும்பு கோட்டை, நீர்கொழும்பு, அலுத்கம, மொரட்டுவ ஆகிய பிரதேசங்களிலிருந்து ரயில் சேவைகள் இடம்பெறும். மடு உற்சவத்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சொந்தவூர் திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்சேவைகள் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே வேளை மடு ரயில் நிலையத்திலிருந்து மடு ஆலயத்திற்கு விசேட இ.போ.ச பஸ் சேவைகளும் இடம்பெறவுள்ளன.
0 comments
Write Down Your Responses