திருமணம் செய்வதாக கூறி முல்லைத்தீவு,வவுனியா பகுதியில் பல பெண்களை ஏமாற்றி பணம் அபகரித்த நபர் கைது!!
வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தினை பெற்றுவிட்டு பணத்துடன் தலைமறைவான மோசடி மன்னன் ஒருசரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இவர் முல்லைத்தீவு பகுதி வழக்கொன்றில் பலகாலமாக தேடப்பட்டு வந்த இந்த நபரினை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தான் திருமணம் செய்வதாக கூறி பணத்தை பெற்றுவிட்டு மீண்டும் பணத்தினை செலுத்த மறுத்து வந்ததாகவும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses