வெளிநாடு சென்ற பேராசிரியர்களை இலங்கைக்கு மீண்டும் அழைக்க ஏற்பாடு
இலங்கையில் பேராசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாடுகளில் பணிபுரியும் பேராசிரியர்களை திரும்ப அழைக்கும் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் கலாநிதி ஷனிகா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுடனான உடன்படிக்கைகளுக்கு அமைய பல பேராசிரியர்கள் கடந்த 30 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் அவர்களில் பலர் நாட்டுக்குத் திரும்பிவரவில்லை. எனவே வடக்கு, கிழக்கு பல்கலைக் கழகங்களுக்கு, குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு பேராசிரியர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.
இது மட்டுமல்லாது பல துறைகளிலும் பேராசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றது எனவே வெளிநாட்டிலுள்ள இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம் குறித்த வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses