அரசாங்கம் நகர சபையின் குப்பை சேகரிக்கும் வாகனமாக மாறியுள்ளது!
பிரதேச அரசியல்வாதி முதல் உயர்மட்ட அரசியல்வாதி வரை செய்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்த முடியாமலும் பிரதேச ரீதியிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முடியாமலும் இருப்பதால் தற்போதைய அரசாங்கம் ‘நகர சபையின் குப்பை சேகரிக்கும் வாகனம்’ போன்று உருவெடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயன்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றும்போது, பிரதேச அரசியல்வாதிகளால் மிகத் துரிதமாக தீர்வு காணமுடியுமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பதால் அவ்விடயம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் செல்லக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது. எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கீழ்மட்டத்திலிருந்து மேலிடத்திலுள்ள அரசியல்வாதிகள் ஆவன செய்யாதவிடத்து அவர்களினால் நடாத்தப்படுகின்ற அரச விரோத செயல்களில் எவ்வித மாறுதலும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான விடயங்களை அரசாங்கத்தின் தலைவர் இல்லாமற் செய்வதற்கு ஆவன செய்யாமலிருப்பதனாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் குப்பைப் பிரச்சினைகளாக நாற்றம் வீசுவதாகவும், இதனால் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் நகர சபையின் குப்பை சேகரிக்கும் வாகனம் போலும் (ட்ரக்டர்) மாறியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses