உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பமாகின்றது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிக்கையில்,
'பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் சமுகம் அளிக்க வேண்டும்.பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 மணிக்கு இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும். இன்று ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைகளில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் படி 2 இலட்சத்து 92 ஆயிரத்து 706 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பாடசாலை பரீட்சார்த்திகளும் 45 ஆயிரத்து 242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.
இந்நிலையில் பழைய பாடத்திட்டத்தின் படி 12 ஆயிரத்து 146 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2ஆயிரத்து 164 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. விசேட தேவையுடையவர்களுக்கென இரத்மலானையிலும் தங்கல்லையிலும் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன' எனக் குறிப்பிட்டார்.
(VAT)
0 comments
Write Down Your Responses