கிரேன்பாஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிமுதல், இன்று காலை 7 மணிவரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது.
பிரதேசத்தில் அமைதி நிலையை தொடர்ந்தும் பேணும் நோக்கில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
பிரதேசத்தில் காணப்பட்ட பதற்றமான சூழல் முழுமையாக நீங்கியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையினூடாக தீர்வுகாண சம்பந்தப்பட்ட தரப்புக்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses